திருவனந்தபுரம்: தமிழக அரசு பாணியில் கேளர ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மீது அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. முன்னதாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்; இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 31 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், இன்று (நவ.2) கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநரின் மோதல் போக்கு காரணமாக 8 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 3 மசோதாக்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் இடதுசாரி அரசுக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்லும் அளவுக்கு இந்த வழக்கு அமைந்துள்ளது.
கேரள அரசின் மனு விவரம் வருமாறு: ஆளுநர் அவர் வசம் வரும் ஒவ்வொரு மசோதாவையும் குறிப்பிட்ட காலத்துக்குள் கையொப்பமிடுவது அவசியம். ஜனநாயக நடைமுறைகளைக் கருத்தில் கொண்டும் மக்களின் நலனைக் கருதியும், பொதுநலனைக் கருதியும் அவற்றில் அவர் கையொப்பமிட வேண்டும். ஆனால், ஆளுநர் அவரது அரசியல் சாசன அதிகாரங்கள் மற்றும் கடமைகளில் இருந்து விலகியுள்ளார். சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல அரசியல் சாசன பொறுப்பை துறுத்தலும் ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் 8 மசோதாக்கள்: கேரள அரசு அனுப்பிய மசோத்தாக்களில் 8 நிலுவையில் உள்ளன. அவற்றில் 3 இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதில் ஒன்று ஆளுநர் முகமது ஆரிஃப் கானை மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் மசோதா என்பது குறிப்பிடத்தக்கது. 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தகுதி நீக்கம் செய்யும் அஸ்திரத்துடன் ஆளுநர் களமாட, பதிலுக்கு கேரள அரசோ பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநரிடம் இருந்து பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதனை ஆளுநர் இதுவரை இழுத்தடிக்கிறார்.
» “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்காது” - சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு
» “காங்கிரஸுக்கு 5 மாநில தேர்தலில்தான் ஆர்வம்” - ‘இண்டியா’ அணுகுமுறையில் நிதிஷ் குமார் அதிருப்தி
லோக் ஆயுக்தா, பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரக் குறைப்பு உள்ளிட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஆளுநரிடம் கையெழுத்து ஆகாமல் கிடப்பில் இருந்த நிலையில்தான் கேரள அரசு, சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி, வேந்தர் பதவியில் இருந்தே ஆளுநரைத் தூக்கியதும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழக பாணியில் கேரளாவும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago