மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல், அவர்களது மகன் நிவான் கோயல் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலங்கள் உட்பட 17 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமல்லாது லண்டன், துபாய் ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம்வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு உள்ளானது. 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது.
» கணை ஏவு காலம் 22 | முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
சிபிஐ வழக்கு: இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது.
சிபிஐ பதிந்துள்ள எஃப்ஐஆர்-ஐ அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், தற்போது நரேஷ் கோயல் குடும்பத்துக்குக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது. “நரேஷ் கோயல் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை முறைகேடாக மடைமாற்றியுள்ளார்” என்று அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago