லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கானின் அறக் கட்டளைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் கட்டித்தை உத்தர பிரதேச அரசு திரும்ப பெறுகிறது.
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் பகுதியில் 41,181 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடம் ஆகியவை ஆசம் கானின் மவுலானா மொஹத் ஜாகர் அறக்கட்டளைக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு கடந்த 2007-ம் ஆண்டு உத்தர பிரதேச அரசு வழங்கியது.
இந்த அறக்கட்டளை சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு சொந்தமானது. இதற் காக அவர் ஆண்டுக்கு ரூ.100 குத்தகை பணமாக செலுத்த வேண்டும் என்று அப்போது நிர்ண யிக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவாக்கத்துக்காக இந்த அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் அங்கு அரசியல் கட்சி அலுவலகம் மட்டுமே தற்போது செயல்படுகிறது. இந்த விதிமுறை மீறலை காரணம் காட்டி, ஆசம்கானின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் கட்டிடத்தை திரும்ப பெற உ.பி. சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து உத்தர பிரதேச கேபினட் அமைச்சர் சுரேஷ் கன்னா கூறியதாவது:
» கணை ஏவு காலம் 22 | முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்
உ.பி. மாநிலம் ராம்பூர் மாவட்டத் தில் ‘முர்தாசா உச்சாதர் மத்யமிக் வித்யாலயாவுக்கு ’ சொந்தமான சுமார் 41,181 சதுர அடி நிலம், ஆசம் கானின் மவுலானா மொகத் அலி ஜாகர் அறக்ககட்டளைக்கு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக விரிவாக்க பணிக்காக இந்த நிலம் குத்த கைக்கு விடப்பட்டது. ஆனால், இங்கு தற்போது அரசியல் கட்சிஅலுவலகம் மட்டுமே செயல்படுகிறது. அதனால் இந்த நிலம் திரும்ப பெறப்பட்டு உ.பி பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சுரேஷ் கன்னா கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago