கர்நாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரி களுக்கும் இலவச குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப் படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

‘மைசூரு மாநிலம்' என்பது ‘கர்நாடகா' என பெயர் மாற்றம் செய் யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவ டைந்த பொன்விழா மற்றும் கர்நாடக மாநிலம் உதயமான 68-வது ராஜ் யோத்சவா நிகழ்ச்சி பெங்களூரு வில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத் தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கன்னட கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷிவராஜ் தங்கடகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கன்னட கலை மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

அகன்ற கர்நாடகாவில் வாழும் அனைத்து மொழியினரும் கன்னடர்கள்தான். இங்கு வாழும் அனைவரும் கன்னட மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடர்கள் பிற‌மொழியினருக்கு கன்னடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். கன்னடர்கள் கன்னட மொழியை மதித்து, அதனை நன்கு கற்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் இதனை கற்பார்கள். தமிழ்நாடு, கேரளா போன்ற அந்தந்த மாநில மொழிகளிலே அனைவரும் பேசுகின்றனர். ஆனால் கர்நாடகாவில் ஆங்கிலம் பேசுகின்றனர்.

அரசு அதிகாரிகளும், அமைச்சர் களும் கன்னடத்தை முழுமையாக கற்க வேண்டும். கடிதங்களை, அறிவிப்புகளை கன்னடத்தில் வெளியிட வேண்டும். கன்னடம் அலுவல் மொழியாக இருந்தும், நடைமுறையில் ஆங்கிலத்தை கடைபிடிப்பதை இன்றிலிருந்து கைவிட வேண்டும். மத்திய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் கடிதம் எழுதும்போது மட்டுமே ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

கர்நாடகாவில் அரசு பள்ளி, கல்லூரிகளே கன்னடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அங்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அடங்கிய வகுப்பறை கள் உருவாக்கப்படும். முதல்கட்ட மாக அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக மின்சாரம், குடிநீர் விநியோகிப் படும். கன்னடத்தில் அதிக மதிப் பெண்களை வாங்கும் மாணவர் களுக்கு சலுகை அளிக்கப்படும்.

மத்திய அரசு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வுகளை நடத்துகிறது. இதனால் கன்னடர் களால் அதிகளவில் வெற்றி பெற முடியவில்லை. கர்நாடகாவில் இனி கன்னடத்திலும் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுகிறேன். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்