இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பு: மத்திய அரசு முடிவுக்கு சோனியா காந்தி கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே போர் நீடித்து வரும் சூழலில், உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்து, ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று கூறியதாவது: இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேலுடன் சமாதானமாக இணைந்து பாலஸ்தீனம் நடந்து கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.

அங்கு இறையாண்மை கொண்ட சுதந்திரமான, சாத்தியமான மற்றும் பாதுகாப்பான தேசம் அமைய நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். உடனடியாக அங்கு போரை நிறுத்த பல நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE