ராஜஸ்தானில் ரூ.214 கோடி இலவச பொருட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரே கட்டமாக நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தேர்தல் செலவு கண்காணிப்புக்கான காவல் துறையின் சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. விகாஸ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுகுறித்து விகாஸ் குமார் கூறியதாவது:

ராஜஸ்தானில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு ரூ.25 கோடி ரொக்கம், ரூ.20 கோடி மதுபானம், ரூ.20 கோடி நகைகள் மற்றும் ரூ.60 கோடி போதைப் பொருட்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதுதவிர வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல், உரம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.214 கோடியாகும்.

மாநிலம் முழுவதும் 650 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. சட்டவிரோத ஆயுதங்களும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஐஜி விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE