இந்தியா வந்துள்ள சீன ஆளுங்கட்சியின் உயர்நிலைக் குழுவினருடன் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட டோகாலாம் எல்லைப் பிரச்சினை கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தக் குழுவினருடன் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. எனினும், இந்தக் கூட்டத்தில் என்னென்ன விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago