ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் 5 வாக்குறுதிகளை முதல்வர் அசோக் கெலாட் முன்வைத்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதிசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் முதல்வர் அசோக் கெலாட் மேலும் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் நேற்று அவர் கூறியதாவது:
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் ஆங்கில வழி கல்வி நடைமுறை அமல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து பசு சாணம், கோமியம் வாங்கப்படும். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலாரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago