ஒடிசாவில் பிஜூ ஜனதாதள கட்சியை சேர்ந்த நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் 2000-வது ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் நவீன் பட்நாயக் மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்து வருபவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அம்மாநிலத்தில் 2000-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் பிஜூ ஜனதாதளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும், 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன், ஒடிசா சட்டப்பேரவைக்கும் நடந்த தேர்தலில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
ஒடிசாவில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்ததால் பாஜகவுடனான கூட்டணியை பிஜூ ஜனதாதளம் முறித்துக் கொண்டது. அந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜூ ஜனதாதளம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும், நவீன் பட்நாயக் இதுவரை இல்லாத அளவில் வெற்றி வகை சூடினார்.
2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒடிசாவில் மொத்தமுள்ள 147 இடங்களில் பிஜூ ஜனதாதளம் 116 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதிகளையும், மூன்றாவது இடத்தை பிடித்த பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றன. மீதமுள்ள இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றன.
இதனால் அம்மாநிலத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உள்ளார். பிஜூ ஜனதாதளத்தை பதவியில் இருந்து இறக்குவதற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இதுபோலவே பிஜூ ஜனதாதளத்தை பலவீனமாக்கி, அந்த இடத்தை அடைய முன்னாள் கூட்டாளியான பாஜகவும் தொடர்ந்து முயன்று வருகிறது.
பாஜக திட்டம்
ஒடிசா மாநிலத்தில் பாஜகவை வலிமைப்படுத்த நடவடிக்கை கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்த வருகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையில் அக்கட்சி கடந்த ஒராண்டாகவே, போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் பாஜக காய் நகர்த்தி வருகிறது.
பைஜெயந்த் ஜெய் பாண்டா அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் சமீபகாலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தநிலையில், இந்த நடவடிக்கையை நவீன் பட்நாயக் மேற்கொண்டுள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படலாம் எனவும், அதுபோலவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாண்டா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் எனக்கூறியுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளரான பாண்டா, தொழிலதிபராகவும் உள்ளார்.
மேலும் ஒரியா மொழி டிவி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், பாண்டாவை கட்சியில் சேர்த்தால் அக்கட்சிக்கு வலுசேர்க்கும். அதேசமயம், பிஜூ ஜனதாதள கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களில் முக்கியமானவரான பாண்டா, வெளியேறினால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது.
வட கிழக்கு உட்பட மற்ற பல மாநிலங்களிலும், மற்ற கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை பாஜக இழுத்து வரும் நிலையில், அதே பாணி ஒடிசாவிலும் பின்பற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கிழக்கு மாநிலங்கள்
2019-ம் தேர்தலுக்கு முன்பாக, நாட்டின் கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கட்சியை வலிமைப்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனால்தான், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மென்மையான இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அதன் அண்டை மாநிலமான ஒடிசாவிலும், கட்சியை பலப்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி நகர்புறங்களிலும் அக்கட்சிக்கு கூடுதல் பலம் உள்ளது. எனவே, 2019-ம் ஆண்டு ஒடிசாவில், நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் ஒரு சேர நடைபெறும் நிலையில், அங்கு கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்படுகிறது.
கடுமையான சவால்
ஆனால் பாஜகவைப் பொருத்தவரை கடுமையான சவால்கள் முன் உள்ளன. நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களை போல இங்கு இஸ்லாமிய சமூக மக்கள் அதிகம் இல்லை. எனவே மத ரீதியான வாக்கு அரசியல் இங்கு பயனளிக்க வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
எனவே நீண்டகாலமாக ஆட்சியில் உள்ள பிஜூ ஜனதாதளம் மீதான அதிருப்தியை முன்னிறுத்தியே பாஜக அரசியல் செய்கிறது. ஆனால், ஒரு ரூபாய் அரிசி திட்டம், மாணவிகளுக்கு இலவச சைக்கிள், லேப் டாப் உள்ளிட்ட மாநில அரசின் ஜன ரஞ்சக திட்டங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேசமயம் நகர்புறங்களில் சாலை மேம்பாடு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பாஜக போரட்டங்களை நடத்தி வருகிறது. எனவே பிஜூ ஜனதாதளத்தின் இடத்தை பிடிக்க, பாஜக இன்னமும் பயணப்பட வேண்டும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
தமிழில்: நெல்லை ஜெனா
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago