குறுகிய சந்துகளில் புகுந்து செல்லும் மின்சார ஸ்கூட்டர்: வாரணாசி காவல் துறையின் புதிய முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: புதிய முயற்சியாக குறுகிய சந்துகளில் கூட்ட நெரிசல் மிக்க நேரங்களிலும் புகுந்து செல்லும் வகையிலான மின்சார ஸ்கூட்டரை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் வாரணாசியில் அமைந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் புனித நகரம் இது. ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் மற்றும் பக்தர்களால் நாள்தோறும் நிரம்பி வழியும் இந்த நகரத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. பல வருடங்களாக இப்பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் திணறும் வாரணாசி காவல்துறையினருக்கு ஒரு புதிய யோசனை உதித்தது. அதன்படி, ’செல்ப் பேலன்சிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்’ என்ற புதிய வகை ஸ்கூட்டரை வாரணாசி காவல்துறையினர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்திலேயே இந்த வகையைச் சேர்ந்த 10 மின்சார ஸ்கூட்டர்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாரணாசியில் அதிகமாக காணப்படும் குறுகிய சந்துகளிலும் எளிதாக புகுந்து செல்லும் வகையில் இந்த ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் இந்த ஸ்கூட்டரில் செல்ல முடியும். சீட்டின் உயரம் ஒரு அடியில் உள்ளதால் இந்த மின்சார ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் சற்று உயரே இருந்தபடி முன்பிருக்கும் கூட்டத்தினைரை எளிதாக பார்க்கலாம்.

இந்த புதியவகை மின்சார ஸ்கூட்டர், ப்ரீகோ எனும் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொரு மாநிலத்திலும் விமான நிலையம், ரயில்நிலையம் போன்ற ஒரு குறிப்பிட்ட பணிகளுக்காக இவ்வகை ஸ்கூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாரணாசியில் புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய படையான ‘சுற்றுலா போலீஸ்’ எனும் பிரிவிற்கு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன.

வாரணாசி காவல்துறை ஆணையர் முத்தா அசோக் ஜெயின்யோசனையால் இந்த ஸ்கூட்டர்வாரணாசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசியின் பயன்பாட்டிற்கு இந்த ஸ்கூட்டர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று முத்தா தெரிவித்துள்ளார்.

இந்த வகை ஸ்கூட்டர்களை ஓட்டும் பயிற்சி மற்றும் சுற்றுலா போலீஸ் பிரிவின் பொறுப்பு வாரணாசியின் கூடுதல் துணை ஆணையரான டி.சரவணனிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் முயற்சி: இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழரான டி.சரவணன் ஐபிஎஸ் கூறும்போது, “அன்றாடம் கூட்ட நெரிசலை சந்திக்கும் வாரணாசியில் 4 மற்றும் 2 சக்கர வாகனங்கள் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த ஸ்கூட்டர்களால் திருடர்களை துரத்திப் பிடித்து விடலாம். கூட்டநெரிசலை கட்டுப்படுத்தலாம். மைக், முதலுதவி பெட்டி, அலாரம் உள்ளிட்டப் பல வசதிகள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. பாதி ஸ்கூட்டர்களை பெண் போலீஸார் பயன்படுத்துவர்” என்றார்.

மின்சார ஸ்கூட்டர்களின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட வாரணாசியின் மாவட்ட ஆட்சியர் கடையநல்லூர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “வித்தியாசமான இந்த புதுவகை ஸ்கூட்டர்களை பொதுமக்கள் வியப்புடன் பார்ப்பார்கள். இதன்மூலம், அவர்களுக்கு காவல் துறையினருடனான நட்பு கூடும். இதில் கிடைக்கும் பலனை பொறுத்து மேலும் அதிக எண்ணிக்கையில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படும். குறித்த நேரத்தில் காவல்துறை உதவி கிடைப்பதில்லை என்ற புகார்களுக்கு இந்தவகை ஸ்கூட்டர் முடிவு கட்டும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சுமார் 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 25 கி.மீ தொலைவு செல்லும் சக்தி படைத்தது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.5 லட்சம் ஆகும். வாரணாசி, பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற மக்களவை தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்