ஹைதராபாத்: தெலங்கானா தேர்தலில் முதல்கட்டமாக பாஜகவின் 52 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மேலிடம் நேற்று வெளியிட்டது.
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக நேற்று முதற்கட்டமாக 52 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இதில், அக்கட்சியின் தெலங்கானா மாநில பொது செயலாளர் பண்டி சஞ்சய், கரீம்நகரில் இருந்து போட்டியிட உள்ளார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் இம்முறை சந்திரசேகர ராவுடன் நேரடியாக மோதுகிறார். இவர் கஜ்வேல் தொகுதியில் சந்திரசேகர ராவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஹுஜூராபாத் தொகுதியிலும் இவர் போட்டியிடுகிறார்.
முதல் பட்டியலில் கோஷாமஹால் தொகுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜகஎம்.எல்.ஏ. ராஜாசிங்குக்கு மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் ஒதுக்கி உள்ளது. சார்மினார் தொகுதியில் மேகராணியும், பத்ராசலத்தில் தர்மாராவும் போட்டியிடுகின்றனர். விஜயசாந்தி, ஜெயசுதா ஆகியோர் 2-வது பட்டியலில் இடம் பெறுவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
22 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago