ஆந்திராவில் பொங்கலை முன்னிட்டு 3 நாளில் ரூ. 400 கோடிக்கு சேவல் பந்தயம்

By என்.மகேஷ் குமார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ரூ. 400 கோடி வரை பந்தயங்கள் கட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில், விசாகப்பட்டினம், கிருஷ்ணா, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவங்களில் போகி பண்டிகை முதல் நேற்று வரை சேவல் பந்தயங்கள் நடைபெற்றன. உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, “இது எங்களின் கலாச்சாரத்தின் அடையாளம்” என கூறி கிராமங்களில் சேவல் பந்தயங்கள் நடந்தன. இதில் ஆந்திர எம்பிக்கள், எம்எல்ஏக்கள் நேரடியாக கலந்து கொண்டு சேவல் பந்தயங்களை தொடங்கி வைத்தனர்.

பந்தயங்களுக்காகவே சேவல்களை பாதம், முந்திரி போன்ற சத்தான உணவு வகைகளை கொடுத்து வளர்த்தனர். இந்த சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயங்கள் நடந்தன. பந்தயங்களில் தோல்வி அடையும் சேவல்கள் அங்கேயே பிரியாணி, வறுவல் செய்து பரிமாறப்பட்டது. இந்த சேவல் பந்தயங்களை போலீஸார் கண்டும், காணாதது போல் நடந்துகொண்டனர். இதனால் சேவல் பந்தயங்கள் கோடிக்கணக்கில் பந்தயங்களோடு களை கட்டியது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 400 கோடிக்கும் மேல் பந்தய பணம் கை மாறியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 4-வது நாளான நேற்றும் சேவல் பந்தயங்கள் பல இடங்களில் நடைபெற்றன. ஆனால் நேற்று போலீஸார் தலையிட்டு பந்தயங்களில் ஈடுபட்டோரை கைது செய்தனர். சேவல்கள், செல்போன்கள் மற்றும் லட்சக்கணக்கான ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்