காரக்பூர்: மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடி-யில் படித்துவந்த தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரக்பூர் ஐஐடி-யில் தெலங்கானாவைச் சேர்ந்த கே.கிரண் சந்திரா என்ற மாணவர், விடுதியில் தங்கி நான்காம் ஆண்டு படித்து வந்தார். கிரண் இவர் நேற்று இரவு 7:30 மணி வரை தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றதாகத் தெரிகிறது. இவரும் தனது அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகக் கதவு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. இதனையடுத்து அவருடைய விடுதி நண்பர்கள் கதவைத் திறந்து பார்த்திருந்திருக்கின்றனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டப்பட்டிருக்கிறார். இதையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ஐஐடி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கல்வி அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2018 முதல் 2023 வரை, இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட மொத்த 98 இறப்புகளில் குறைந்தது 39 என்ற எண்ணிக்கையில் ஐஐடிகளில் நடந்துள்ளன எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago