கேசிஆர் குடும்பத்துக்கு ‘இழப்பீடு’ - பாஜக எம்.பி. சர்ச்சைப் பேச்சுக்கு கவிதா பதிலடி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வரின் குடும்பத்தினரைக் குறிப்பிட்டு ‘இழப்பீடு’ பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி.க்கு சந்திரசேகர ராவின் மகள் கவிதா பதிலடி தந்திருக்கிறார்.

தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ், ஆளும் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்,தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய பாஜக (நிஜாமாபாத்) எம்.பி அரவிந்த் தர்மபுரி, “நடைபெறவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பி.ஆர்.எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கே.சி.ஆர் காப்பீடு திட்டத்தின் கீழ் 56 வயதுக்குக் குறைவான விவசாயிகள் மரணமடைந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் வழங்குகிறோம். கே.சி.ஆரின் காலம் முடிந்துவிட்டது. எனவே, இளைஞர்கள் இறந்தால் தொகையை அதிகப்படுத்தலாம்” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க எம்.பி.யின் இந்தக் கருத்துக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பின.

இந்தக் கருத்துக்கு கே.சி.ஆரின்ன் மகள் கவிதா வீடியோ மூலம் பதிலடி தந்துள்ளார். அதில், “அரவிந்த் தர்மபுரி எங்களுக்கு எதிராக்கப் பேசிய கருத்து துரதிருஷ்டவசமானது. உங்கள் (மக்கள்) மகள்களுக்கு எதிராக அவர் இந்தக் கருத்துகளை கூறினால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா... நான் அரசியலில் இருக்கிறேன். கே.சி.ஆரின் மகன், மகள் என்பதற்காக இப்படித்தான் எங்களிடம் பேச வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அவரின் பேச்சு ‘அன்பார்லிமென்ட்’ வகையிலான” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE