வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தலைநகர் அய்ஸ் வாலில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:

அரசியல் கட்டமைப்பு பாது காப்பு, மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இன்றி மக்கள் ஒற்றுமையாகவும், சுதந்திரமா கவும் வாழ்வதை உறுதி செய்வ தன் மூலம் இண்டியா கூட்டணி இந்தியாவின் சித்தாந்தத்தையும், அதன் மதிப்புகளையும் பாது காக்கும் அரணாக விளங்குகிறது.

பாஜக மற்றும் அதன் சித்தாந்தத்தின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. நம் தேசத்தை பற்றிய அவர்களுடைய பார்வை நம்முடையதைவிட வேறுபட்ட தாக உள்ளது. இந்தியாவை ஒரே சித்தாந்தம் கொண்ட அமைப்பு தான் ஆள வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக உள்ளது. நாம் அந்த சித்தாந்தத்தை துல்லி யமாக எதிர்க்கிறோம்.

முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணியானது அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் பாஜகவோ அனைத்து முடிவுகளும் டெல்லியில் மட்டுமே எடுக் கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந் தங்களால் வடகிழக்கில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கடுமை யான தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE