திருமலையில் ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வீதியுலா

By என்.மகேஷ் குமார்

திருமலையில் ரதசப்தமி விழா, இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதையொட்டி உற்ஸவரான மலையப்ப சுவாமி, காலை முதல் இரவு வரை தொடர்ந்து 7 வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதன் காரணமாக இன்று கோயிலில் நடைபெறும் ஆனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பக்தர்களால் ‘மினி பிரம்மோற்ஸவம்’ என்றழைக்கப்படும் ரதசப்தமி விழா, இன்று திருமலை திருப்பதியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய பிரபை வாகன சேவையுடன் தொடங்கியது ரதசப்தமி விழா.

அதிகாலை 5.30 மணிக்கு தங்கச் சூரிய பிரபையில் மலையப்பர் நான்கு மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி, சின்ன சேஷ வாகனத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

பின்னர் 3வது வாகனமாக கருட வாகனத்தில் உற்ஸவ மூர்த்திகள் காலை 11 மணியில் இருந்து மாட வீதிகளில் பவனி வந்தனர். இதில் மாட வீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஏழுமலையானை ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்த கோஷமிட்டு வழிபட்டனர்.

தொடர்ந்து, அனுமன் வாகனம், சக்கர ஸ்நானம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் என தொடர்ந்து நடைபெற உள்ளது.

ஒரே நாளில் பல வாகன சேவையில் சுவாமி பவனி வருவதைத் தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக மாட வீதிகளில் 11 வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாட வீதியில் உள்ள பக்தர்களுக்காக சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு, குடிநீர், மோர், கைக்குழந்தைகளுக்கு பால் முதலானவை இலவசமாக வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், மருத்துவம், போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரதசப்தமி விழா நடைபெறுவதையொட்டி, இன்று அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்