‘பத்ம ஸ்ரீ விருது பெறுவதில் விருப்பமில்லை’பிரதமர் மோடிக்கு கர்நாடக சித்தேஸ்வர் சுவாமி கடிதம்

By ஏஎன்ஐ

பெங்களூரு

தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை பெறுவதில் விருப்பமில்லை என பிரதமர் மோடிக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மீக குரு சித்தேஸ்வர் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

தான் ஒரு சன்னியாசியாக இருக்கும்போது, இதுபோன்ற விருதுகள் பெறுவதில் விருப்பமில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், நடிப்பு, நடனம், இசை உள்ளிட்ட பல கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், 3 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகள், 9 பேருக்கு பத்மபூஷன் விருதுகள், 73 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மீக குரு சித்தேஸ்வரா சுவாமிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் விஜயபுராவில் பிறந்த சித்தேஸ்வரா சுவாமி, தெற்கு கர்நாடகத்தின் நடமாடும் தெய்வமாக அங்குள்ள மக்களால் கருதப்படுகிறார். ஏராளமான ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை எழுதி ஆன்மீக பாதைக்கு வழிகாட்டி வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கியுள்ள பத்ம ஸ்ரீ விருதை பெறுவதில் தனக்கு விருப்பமில்லை என ஆன்மீக குரு சித்தேஸ்வர் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 26-ம்தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-

மத்திய அரசுக்கு எனக்கு மிக உயரிய பத்ம ஸ்ரீ விருது அறிவித்ததில் நான் மிகவும் மிகழ்ச்சி அடைகிறேன். உங்கள் மீதும், உங்களின் அரசின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளேன். ஆனால், என்னால் இந்த விருதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை..

ஒரு சன்னியாசியாக இருக்கும் எனக்கு விருதுகள் பெறுவதில் ஆர்வமும், நாட்டமும் இல்லை. மிகஉயர்ந்த பத்ம ஸ்ரீ விருதை ஏற்க முடியாது என்ற என்னுடைய முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்