புதுடெல்லி: ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து டெல்லிக்கு நேற்று காலை 2-வது சிறப்பு விமானம் வந்து சேர்ந்தது. அதில் 235 இந்தியர்கள் வந்தனர்.
ஹமாஸ் தீவிரவாத தாக்குதல் காரணமாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டது. இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தனர். அவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட முதலாவது சிறப்பு விமானத்தில், நேற்று முன்தினம் 212 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இந்நிலையில் 2-வது விமானம் நேற்றுகாலை டெல்லி விமான நிலையம்வந்து சேர்ந்தது. அதில் 235 இந்தியர்கள் வந்தனர். அவர்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார். ஆபரேஷன் அஜய் திட்டம்தொடரும் எனவும், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் அனைத்து இந்தியர்களையும் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார்.
நாடு திரும்பியவர்கள், ‘வந்தே மாதரம்’, பாரத் மாதா கி ஜே’ எனகோஷம் எழுப்பினர். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, அவர்கள் பாராட்டினர். இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘‘ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் எங்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் அருமையான திட்டம். இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
» பெங்களூருவில் வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.42 கோடி - தெலங்கானா தேர்தலுக்காக பதுக்கி வைத்த பணமா?
மற்றொரு பயணி கூறுகையில், ‘‘இஸ்ரேலில் உள்ள இந்திய மாணவர்கள், நாடு திரும்ப முடியுமாஎன்ற அச்சத்தில் இருந்தோம். எங்களை தாயகம் அழைத்து வந்த மத்திய அரசுக்கு நன்றி’’ என்றார்.
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இதுவரை 447 இந்தியர்கள் விமான கட்டணமின்றி நாடு திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் நலன் காக்கப்படும் எனஇஸ்ரேலுக்கான இந்திய தூதர்சஞ்சீவ் சிங்லா உறுதியளித்துள்ளார். இஸ்ரேல் நிலவரத்தை கண்காணிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான தகவல்கள்மற்றும் உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மத்திய அமைச்சர் முரளிதரன் , வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago