திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் வருடாந் திர பிரம்மோற்சவம் 18-ம் தேதிமுதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இன்று முதல், வரும் 23-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாநடைபெற உள்ளது. இதனையொட்டி திருப்பதி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும், அலிபிரி நுழைவு வாயில், சோதனைச் சாவடி, திருமலையில் ஏழுமலையான் முகப்பு கோபுரம் உட்பட முக்கிய இடங்கள் அனைத்தும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி களின்படி அங்குரார்ப்பணம் நடந்தது. ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று மாலை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

நவராத்திரி பிரம்மோற்சவத் திற்கு 3,054 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி எஸ்.பி.பரமேஸ்வர் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும்கூறியதாவது: தசரா விடுமுறைகள் என்ப தால் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க் கிறோம். கருட சேவை 19-ம் தேதியும், தங்க தேரோட்டம் 22-ம்தேதியும், சக்கர ஸ்நானம் 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

இதில் கருட சேவையான 19-ம் தேதி திருமலைக்கு பைக்குகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் 32 இடங்களில் 15,000 வாகனங்கள் நிறுத்த ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE