புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் பெயர் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்திய மசூதிகள் அமைப்பின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியின் பாபர் மசூதி-ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு கடந்த 2019, நவம்பரில் வெளியானது. இதில் 1992, டிசம்பர் 6-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக, புதிய மசூதி கட்ட உத்தர பிரதேச மாநில அரசு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, பாபர் மசூதி இருந்தஇடத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் தனிப்பூர் கிராமத்தில் 5ஏக்கர் நிலம் உ.பி. சன்னி முஸ்லிம்மத்திய வக்ஃபு வாரியத்திடம் உ.பி. அரசால் அளிக்கப்பட்டது. இந்த வாரியம் சார்பில் ‘இந்தோஇஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை’ அமைத்து, 2021 ஜனவரி 26-ல் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தை சேர்ந்தவர்: அயோத்தியில் அமையவுள்ள இந்த புதிய மசூதிக்கு, ‘மவுல்லவி முகம்மது ஷா’ எனும்சுதந்திரப் போராட்ட வீரரின் பெயர்சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த இந்தமுகம்மது ஷா, 1857 சிப்பாய் கலகத்தில் எழுந்த போரில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர். இத்துடன் மசூதியின் வடிவமைப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட் டுள்ளது.
» தமிழில் பாடும் பிரதமர் மோடி: இது AI வாய்ஸ் குளோனிங் அட்டகாசம்!
» ODI WC 2023 | “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி” - வங்கதேச ரசிகை
இற்கான முடிவு, மும்பையில் நடைபெற்ற இந்திய மசூதிகளின் அமைப்பான, ‘ஆல் இந்தியா ராப்தா-எ-மஸ்ஜித்’ மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்துஷியா, சன்னி உள்ளிட்ட முஸ்லிம்பிரிவுகளின் முக்கிய மவுலானாக்கள் கலந்து கொண்டனர். இதில், மாற்றத்துக்கான யோசனையை பாஜகவை சேர்ந்தவரான ஹாஜி அரபாத் ஷேக் முன்வைத்தார்.
அரபு நாடுகளின் வடிவம்: இதுகுறித்து அயோத்தி மசூதி அறக்கட்டளையின் தலைவர் ஜுபர் பரூக்கி கூறும்போது, “இந்திய மசூதிகளின் வடிவங்களை போல் வழக்கமானதாக அயோத்தி மசூதியின் வடிவம் இருந்தது. இதுதற்போது ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்குநாடுகளின் மசூதிகள் வடிவத்துக்கு மாற்றப்படுகிறது.
இதன் பெயரும் இறைத்தூதரான முகம்மது நபியின்பெயரில், ‘முஹம்மது பின் அப்துல்லா மசூதி’ என மாற்றப்படுகிறது. சுமார் 5,000 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் அளவுக்கு மசூதி அமைகிறது. இத்துடன் 300 படுக்கைகளுடன் இலவச புற்றுநோய் மருத்துவமனையும் அறக்கட்டளை சார்பில் கட்டப்படும். இப்பணிகளுக்காக உத்தர பிரதேசம்தவிர இதரபகுதிகள் உள்ளிட்டஉலகம் முழு வதிலும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
தனிப்பூர் மசூதி மற்றும் மருத் துவமனைக்கான வரைபடங்கள் அயோத்தி மாநகர வளர்ச்சி ஆணையத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற் காக, தொடக்கநிலை கட்டணமாக ரூ.1 கோடியை அறக்கட்டளையிடம் உ.பி. அரசு வசூலித்துள்ளது. மசூதிக்கான புதிய வரைபடத்தை புனேயின் ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பழைய மசூதியின் அளவை விட அதிக மானது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago