திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை கோலாகலமாக தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை 15-ம் தேதி இரவு கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைவருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு கோலாகலமாக நடத்தப்பட உள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, இன்று ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் வைகானச ஆகம விதிகளின்படி நடத்தப்பட உள்ளது. மாலை விஸ்வகேசவர் என்றழைக்கப்படும் ஏழுமலையானின் சேனாதிபதி 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிடுவார்.

அதன் பின்னர், நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்