ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நவ.25-க்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை நவம்பர் 23-ம் தேதியிலிருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ராஜஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் அதிக அளவில் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் மாநிலத்தில் தேர்தல் தேதியை மாற்றிமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்களும் பிரதிநிதித்துவங்களும் வந்தன.

அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றால் அது பெரிய அளவில் மக்கள் வாக்குப்பதிவில் பங்கேற்பதை பாதிக்கும், பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இந்தப் பிரதிநிதித்துவம் மற்றும் காரணிகளைக் கருத்தில் கொண்டு ராஜஸ்தான் தேர்தல் தேதியை நவம்பர் 23-ம் தேதியில் இருந்து நவம்பர் 25-ம் தேதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முன்னதாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா சட்டப்பேரவை பதவிக் காலம் வரும் 2024 ஜனவரியில் வெவ்வேறு தேதிகளிலும், மிசோரம் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிச.17-ம் தேதியும் முடிவடைகிறது. அதனால், அக்.9ம் தேதி 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30-ம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது: மிசோரம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் நவ.7-ம் தேதி தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவ.7, 17-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் நவ.17, தெலங்கானாவில் நவ.30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். சத்தீஸ்கர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

5 மாநிலங்களில் மொத்தம் 679 தொகுதிகள் உள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த சட்டப்பேரவை தொகுதிகளில் 6-ல் ஒரு பங்கு ஆகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்