ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 6 ஆண்டுகளாக தனது குடும்ப சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். 7- வது ஆண்டாக சொத்து விவரங்களை அவரது மகனும், மாநில பஞ்சாயத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான லோகேஷ் நேற்று அமராவதியில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமாக ஒரு அம்பாசிடர் கார் உள்ளது. மேலும் அவரது சொத்து மதிப்பு ரூ. 2.53 கோடி. இவரது மனைவி புவனேஸ்வரிக்கு ரூ. 25.41 கோடி, லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.15.21 கோடி. லோகேஷின் மனைவி பிராம்மனியின் சொத்து மதிப்பு ரூ.15.01 கோடி, சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஷின் சொத்து மதிப்பு ரூ. 11.54 கோடி.
நகைகள் மதிப்பு
சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு ரூ.1கோடியே 27 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3,519 கிராம் தங்க நகைகள், 37 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாகவும், ஒரு ஆடி கார் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மருமகள் பிராம்மனிக்கு, 2,325 கிராம் தங்க நகைகள், 310.6 கேரட் வைர நகைகள், 97 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரன் தேவான்ஷுக்கு 11.54 கோடி வரை வங்கிகளில் வைப்பு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago