காதலனின் உதவியால் கணவனைக் கொன்று மனைவி நாடகமாடிய வழக்கில் காதலன் ராஜேஷை போலீஸார் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்தனர்.
நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி (32). இவரது மனைவி சுவாதி (27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இதனிடையே சுவாதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பழக்கமானார்.
இவர்களது நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு தடையாக இருந்த கணவர் சுதாகர் ரெட்டியை கொலை செய்வது என இருவரும் திட்டமிட்டனர்.
ராஜேஷ் பிசியோதெரபிஸ்ட் என்பதால், கடந்த மாதம் 27ம் தேதி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் சுதாகர் ரெட்டிக்கு மயக்க ஊசி போடப்பட்டது. அதன் பின்னர் இரும்பு கம்பியால் சுதாகர் ரெட்டியை அடித்து கொன்றனர். இதனை தொடர்ந்து சுதாகர் ரெட்டியின் சடலத்தை அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏறக்குறைய உருவ ஒற்றுமையில் சுதாகர் ரெட்டியும், ராஜேஷும் ஒரே மாதிரி இருப்பதால், சமீபத்தில் வெளிவந்த ‘எவடு’ எனும் ஒரு தெலுங்கு படத்தை போன்று, காதலன் ராஜேஷின் முகத்தை மட்டும் எரித்து, அவர்தான் தனது கணவர் சுதாகர் ரெட்டி என நம்பவைத்து, அதன்பின்னர் பிளாஸ்டி சர்ஜரி மூலம் சரிசெய்ய திட்டமிட்டனர். அதன்படி, ராஜேஷின் முகத்தை மட்டும் பெட்ரோல் தெளித்து எரித்தார் சுவாதி. அப்போது ராஜேஷின் வாயை பிளாஸ்திரியால் மூடினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, யாரோ மர்ம கும்பல் தங்களது வீட்டிற்குள் புகுந்து, கணவனை தாக்கியதாகவும், அப்போது அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்தார். பின்னர், முகத்தில் படுகாயமடைந்த தனது காதலன் ராஜேஷை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய அனுமதித்தார் சுவாதி. ஆனால், தீக்காயம் குறைவாக இருப்பதால் முழுமையாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனை தொடர்ந்து காதலன் ராஜேஷுக்கு அந்த மருத்தவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மருத்தவமனைக்கு வந்து நலம் விசாரித்து வந்தனர். ஆனால் யாரிடமும் ராஜேஷ் பேசுவதில்லை. முகத்தை மூடிய படி படுத்துக் கிடந்தார். பல சமயங்களில் தூங்குவது போல் நடித்தார். சுதாகர் ரெட்டியின் பெற்றோரும் வந்து ‘மகனை’ பார்த்து கதறி அழுதனர். ஆனால் சில அடையாளங்கள் பொருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தனர். உடல் நலம் விரைவில் தேற மாமிசம் விரும்பி சாப்பிடும் தனது மகனுக்கு ‘மட்டன் சூப்’ கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் தான் அசைவம் சாப்பிட மாட்டேன் என கூறி காதலன் ராஜேஷ் அதனை நிராகரித்தார். இதனால் சந்தேகம் உறுதியாகி, இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர் சுதாகர் ரெட்டியின் பெற்றோர்.
அதன்பேரில், சுதாகார் ரெட்டியின் ஆதார் அட்டையில் உள்ள கைரேகையின் அடிப்படையில், சிகிச்சை பெற்று வரும் ராஜேஷின் கைரேகளை அவருக்கு தெரியாமல் போலீஸார் பதிவு செய்து ஆய்வு செய்தனர். அப்போது இரண்டும் பொருந்தவில்லை. ஆதலால், சிகிச்சை பெற்று வருவது சுதாகர் ரெட்டி இல்லை எனும் முடிவிற்கு வந்த போலீஸார், சுவாதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உண்மைகளை சுவாதி போலீஸாரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்த போலீஸார் கடந்த 9ம் தேதி சுவாதியை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் உடல் நலம் தேறியதால்,அவரை இன்று காலை நாகர் கர்னூல் போலீஸார் கைது செய்தனர். சினிமா பாணி போன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago