காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி: காட்டி கொடுத்த மட்டன் சூப்

By என்.மகேஷ் குமார்

கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி சுவாதி (27). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே சுவாதிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பழக்கமானார். இவர்களது நட்பு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு தடை யாக இருந்த கணவன் சுதாகர் ரெட்டியை கொலை செய்வது என இருவரும் முடிவு செய்தனர். ராஜேஷ் பிசியோதெரபிஸ்ட் என்பதால், கடந்த மாதம் 27-ம் தேதி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுதாகர் ரெட்டிக்கு மயக்க ஊசி போடப்பட்டது. பின்னர் இரும்புக் கம்பியால் சுதாகர் ரெட்டியை அடித்துக் கொன்றனர். சடலத்தை அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்தனர்.

கணவன் சுதாகர் ரெட்டிக்கும் காதலன் ராஜேஷுக்கும் ஏறக்குறைய உருவ ஒற்றுமை இருந்ததால், ராஜேஷின் முகத்தை மட்டும் எரித்து அனைவரையும் நம்பவைத்த பின்னர், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிசெய்ய திட்டமிட்டனர். அதன்படி ராஜேஷின் முகத்தை மட்டும் பெட்ரோல் தெளித்து எரித்த சுவாதி, வாயை பிளாஸ்திரியால் மூடினார்.

இதையடுத்து யாரோ மர்ம கும்பல் தங்கள் வீட்டுக்குள் புகுந்து, கணவனை தாக்கியதாகவும், அப்போது அவரது முகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் நாடகமாடினார். முகத்தில் காயமடைந்த ராஜேஷை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் தீக்காயம் குறைவாக இருப்பதால் முழுமையாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்றாலும் ராஜேஷுக்கு அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே தகவல் அறிந்து உறவினர்களும், நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வந்தனர். ஆனால் யாரிடமும் பேசாத ராஜேஷ், முகத்தை மூடியபடி படுத்திருந்தார். பல சமயங்களில் தூங்குவது போல் நடித்தார். சுதாகர் ரெட்டியின் பெற்றோரும் வந்து பார்த்து ராஜேஷை தங்கள் மகன் என கருதி கதறி அழுதனர். ஆனால் சில அடையாளங்கள் பொருந்தவில்லை என்பதால் சந்தேகம் அடைந்தனர். உடல் நலம் விரைவில் தேற மாமிசம் விரும்பி சாப்பிடும் தங்கள் மகனுக்கு ‘மட்டன் சூப்’ கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் அசைவம் சாப்பிட மாட்டேன் என ராஜேஷ் அதை நிராகரித்தார்.

இதனால் சந்தேகம் உறுதியாகி, இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். சுதாகர் ரெட்டியின் ஆதார் அட்டை அடிப்படையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷின் விரல்ரேகையை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்து போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது விரல்ரேகை பொருந்தவில்லை என்பதால் சிகிச்சை பெறுவது சுதாகர் ரெட்டி இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். பின்னர் சுவாதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடந்த உண்மையை சுவாதி தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் கடந்த 9-ம் தேதி சுவாதியை கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் ராஜேஷையும் விரைவில் கைது செய்ய உள்ளதாக நாகர் கர்னூல் போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்