முதலிரவில் கணவனால் தாக்கப்பட்ட மணப்பெண்ணின் மருத்துவ செலவை ஏற்றது ஆந்திர அரசு

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள கங்காதர நெல்லூர் மண்டலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷுக்கும் (24), பக்கத்து கிராமத்தை சேர்ந்த சைலஜா எனும் பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை சித்தூரில் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று தனக்கு ஆண்மை குறைபாடு உள்ள விஷயத்தை சைலஜாவிடம் ராஜேஷ் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சைலஜா தனது பெற்றோரிடம் இதைக் கூறி அழுதார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், சைலஜாவை தாக்கினார். பலத்த காயமடைந்த சைலஜா திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். சித்தூர் சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சைலஜாவின் முழு மருத்துவ செலவையும் ஏற்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. சைலஜா முழுமையாக குணமடையும் வரை அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதனிடையே, நீதிமன்ற அனுமதியுடன் ராஜேஷுக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்