பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது 1996-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் வீடு, நிறுவனங்களில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம், புடவை, கைக்கடிகாரம், டிவி, வாகனம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு மாநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் தொடர்பான அறிக்கையை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் அளித்தனர்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 40 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மோகன், “இதுதான் இறுதி அவகாசம். 40 நாட்களில் ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என கெடு விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago