புதுடெல்லி: இஸ்ரேல் நாடு உதயமான பிறகு பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் வசித்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேலில் குடியேறினர். மேலும் இஸ்ரேல் நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏராளமான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் டெல்லி, இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஏர் இந்தியா விமான சேவையில் நேற்று டெல்லியில் இருந்து டெல் - அவிவ் செல்ல 139 பயணிகளும், டெல்-அவிவ் நகரில் இருந்து டெல்லி வருவதற்கு140 பயணிகளும் முன்பதிவு செய்திருந்தனர். இரு மார்க்கத்திலும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
நேபாளிகள் 17 பேர் சிக்கினர்: இஸ்ரேலில் பாலஸ்தீன தீவிரவாதிகள் புகுந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 17 பேர் நேபாளத்தை சேர்ந்த மாணவர்கள். இதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் படித்த 7 பேர் காயம் அடைந்துள்ளனர். மற்ற 10 பேர் இஸ்ரேல் வேளாண் கல்லூரியில் பயின்ற மாணவர்கள்.
» பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி - மும்பை காவல் துறையை எச்சரித்த தேசிய புலனாய்வு முகமை
» ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு - தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளிக்க உத்தரவு
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago