புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 5 மாதங்களுக்கு முன்மே 3-ம் தேதி மாலை மணிப்பூரில் கலவரம் மூண்டது. மாறாக, மோசமான நிலை என்பதில் இருந்து மிக மோசமான நிலைக்கு மணிப்பூர் மாநிலம் மாறியது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை முன்வைக்கிறோம்.
1. பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூர் மாநிலத்துக்கு எப்போது சென்றார்?
2. பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூர் முதல்வரிடம் எப் போது பேசினார்?
3. மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களை பிரதமர் மோடி கடைசியாக எப்போது சந்தித்தார்?
4. மணிப்பூரைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்களிடம் பிரதமர் மோடி கடைசியாக இது குறித்து எப்போது ஆலோசனை நடத்தினார்?
இவையே அந்தக் கேள்விகள்.
ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் ஒரு பிரதமர் முற்றாக கைவிட்டுவிட்டது இதுபோல இதற்கு முன்பு நடந்ததே இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய பலத்துடன் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மணிப்பூர் மிகமோசமான நிலைக்குதள்ளப்பட்டுவிட்டது. பாஜகவின் மோசமான கொள்கைகளும் பிரதமர் மோடியின் முன்னுரிமைகளுமே இதற்குக் காரணம். இவ்வாறு அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago