சிக்கிம் | மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்; 23 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

காங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று (அக்.4) காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் சில நீரில் மூழ்கின. அதிலிருந்த 23 ராணுவ வீரர்களைக் காணவில்லை. இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "புதன்கிழமை காலை சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்டம் அருகே பர்டாங் எனும் பகுதியில் ராணுவ வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சுங்தங் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் 15 முதல் 20 அடிக்கு உயர்ந்தது. இதில்தான் ராணுவ வாகனங்கள் மூழ்கியுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேகவெடிப்பு நிகழ்ந்தவுடன் சிக்கிம் முழுவதும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரேம் சிங் தமங் பாதிப்புகளை ஆய்வு செய்தார். இவை ஒருபுறம் இருக்க ராணுவ வீரர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.

மேகவெடிப்பு என்றால் என்ன? சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாக பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு. இந்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு முதலியன நிகழ்கிறது. கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த நிலச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளாஷ் ஃப்ளட்ஸ் என்றால் என்ன? மிதமிஞ்சிய மழை, அணை அல்லது மதகு உடைப்பு அல்லது திடீரென தண்ணீர் வெளியேறிய சில நிமிடங்களில் அல்லது மணிநேரங்களுக்குள் திடீர் வெள்ளம் ஏற்படுவது ஃப்ளாஷ் ஃப்ளட்ஸ் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்