புதுடெல்லி: சீன நிறுவனங்களிடம் இருந்து ரூ.38 கோடி நிதி பெற்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக, நியூஸ்கிளிக் இணையளத்தின் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை நேற்று சீல் வைத்தது. அங்கு பணியாற்றிய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்க கோடீஸ்வர் நெவிலி ராய் சிங்கம் என்பவருக்கு சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுடன் தொடர்பு உள்ளது என்றும், நியூஸ்கிளிக் நிறுவனம் உட்பட உலகின் பல ஊடகங்களுக்கு நிதியளிக்கிறார் என்றும் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையேவிரோதத்தை ஏற்படுத்தியது, குற்றசதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சீனா தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் ரூ.38 கோடி பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்குகள் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று சோதனையில் இறங்கியது. இந்நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர் கள் 10 பேரின் வீடுகள் ஆகியவற்றில் இந்த சோதனை நடத்தப் பட்டது.
நியுஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங்,உர்மிலேஷ், ஆனின்டியோ சக்ரவர்த்தி, வீடியோகிராபர் அபிஷர் சர்மா, எழுத்தாளர் கீதா ஹரிகரன் உட்பட பலரது வீடுகளில் போலீஸார்நேற்று சோதனை நடத்தினர். பத்திரிகையாளர்கள் அனுராதா ராமன், சத்யம் திவாரி, ஆதித்தி நிகாம் மற்றும் சுமேதா பால் ஆகியோர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிறுவனத்துக்கு கட்டுரைகள் அனுப்பிய மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலர் தீஸ்டா சீத்தால்வாட் வீட்டில் மும்பை போலீஸார் சோதனை நடத்தி விசாரித்தனர்.மூத்த பத்திரிக்கையாளர்கள் பரன்ஜாய் குஹா தகுர்தா, சுமோத் வர்மாஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பத்திரிகையாளர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். மேலும், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம், இந்தியாவில் கரோனா தொற்று தொடர்பாக நீங்கள் செய்தி கொடுத்தீர்களா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மகன் சன்மித் குமார் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இதனால்சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு சன்மித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையின் இறுதியாக நியூஸ்கிளிக் அலுவலகத்துக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.
நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறுகையில், மற்ற விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதவற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் யுக்திதான் இந்த நடவடிக்கை என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பிமனோஜ் ஜா கூறுகையில், ‘‘மத்தியஅரசின் உத்தரவுப்படி நியூஸ்கிளிக்கு நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago