தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் படங்கள்: ரயில்வே அமைச்சர் பகிர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் (ஸ்லீப்பர் கோச்) கூடிய வந்தே பாரத் ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சூழலில் அதன் கான்செப்ட் படங்களை பகிர்ந்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

தூங்கும் வசதி பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அண்மையில் ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. சுமார் 857 படுக்கைகள் கொண்ட வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். அது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE