ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் ரகசிய திட்டம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதைக் கண்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.
இதனிடையே தெற்கு காஷ்மீர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றை பாதுகாப்பு படையினர் நேற்று அழித்தனர். எனினும் ஆயுதங்கள் எதுவும் அதில் காணப்படவில்லை.
» 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: லட்சிய தாலுகா திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி
» கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago