தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இன்று முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா செய்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் வெளிவந்தது. இதில் சிட்டி எனும் கதாபாத்திரம் ஒரு ரோபாவாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ, நல்ல விஷயங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ரோபோ போலீஸ்’ ஹைதராபாத்தில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளது.
ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த எச்-போட் ரோபாடிக் ரக போலீஸ் ரோபோ. திறமை வாய்ந்த ரோபாவாக ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ளதென இதனை உருவாக்கிய ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோ, புகார்களை பெற்றுக்கொள்ளும், தன்னிடம் பேசுபவர்களை ஸ்கேன் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும். தன்னிடம் பேசுபவர்களுக்கு பதிலளிக்கும். மேலும், வெடிகுண்டை கண்டறிந்து அதனை நீக்கும் வல்லமை படைத்ததாகும்.
துபாயில்தான் உலகிலேயே முதன் முறையாக ரோபோ போலீஸ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. இது, பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ரோபோவுக்கு காலில் சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago