புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையில 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்கள் மேற்கு வங்கத்தில் அதிகரித்துள்ளன. முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. இதன்மூலம் மேற்கு வங்கத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர் என்பதை அறிய முடியும்.
`தாய், தாய்நாடு, மக்கள்` (`மா,மாட்டி, மனுஷ்`) என்ற சொற்றொடருக்கு பெயர்போனது மேற்கு வங்க மாநிலம். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் `வெடிகுண்டு, துப்பாக்கிக் குண்டு, மகளிருக்கு எதிரான குற்றங்கள்` (பாம், புல்லட், பேட்டி கே சாத் அநியாய்) என்ற மோசமான பெயரை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2022-ல்15 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவாயின. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்றைய நாள் வரை கொல்கத்தாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
» இஸ்கான் கோசாலை விவகாரம் - ரூ.100 கோடி இழப்பீடு கோரி மேனகா காந்திக்கு நோட்டீஸ்
» வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
அண்மையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பங்காவ்ன் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் அந்த சிறுமியின் தாய், கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலையான அந்தப் பெண் பாஜகவைச் சேர்ந்தவர். மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. மாநிலத்தில் மகளிரின்பாது காப்பு கேள்விக்குறியாகி யுள்ளது.
மேற்கு வங்க அரசின் ஆதரவு,கிரிமினல்களுக்கு உள்ளது. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் போலீஸாரோ, அரசு நிர்வாகமோ எடுப்பதில்லை. இதனால் அவர்கள் தைரியமாக குற்றங்களைச் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago