மைசூரு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து பாஜக எதிர்ப்பு அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மைசூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்திருப்பது குறித்து கேட்கிறீர்கள். பாஜகவுக்கு எதிரான அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக வெறும் அரசியல் மட்டுமே செய்துள்ளது. சமூகங்களைப் பிளவுபடுத்தும் அரசியல் அது. இந்த உண்மை தெரிந்ததால், பல கட்சிகள் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகின்றன.
காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. முழு அடைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத் தீர்ப்பு உள்ளபோதிலும், நாங்கள் அவர்களை தொந்தரவு செய்யவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago