வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

By என்.மகேஷ் குமார்

இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை வந்ததால், இன்று காலை மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால் காலையிலேயே சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அபிஷேகத்தை தொடர்ந்து, காலை 5 மணிக்கு விஐபி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பின் காலை 8 மணி முதல் சர்வ தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அமைச்சர்கள் 20 பேர், எம்.பி., எம்எல்ஏ, மேலவை உறுப்பினர்கள் 150 பேர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பல்வேறு மாநில நீதிபதிகள் திருமலைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு வசதிகளை செய்து தர தேவஸ்தானம் திணறி வருகிறது.

வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு நாராயணகிரி, கோகர்பம் உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக 6 கி.மீ. தொலைவுக்கு தற்காலிக வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள், நேற்று காலை 10 மணியிலிருந்தே வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 30 மணி நேரத்துக்கு பின்னரே தரிசனம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்