உலக தலைவர்களில் மோடி முதலிடம்: சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

இதன்படி அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடிமுதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 76% பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர். 18% பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு அடுத்து சுவிட்சர்லாந்து அதிபர் ஆலன் பெர்செட் 64% வாக்குகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மானுவேல் லோபஸ் ஒபரடோர் 61% வாக்குகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.

7-ம் இடத்தில் அமெரிக்க அதிபர்: பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 49%, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 48%, இத்தாலி பிரதமர் மெலோனி 42%சதவீத வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40% வாக்குகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் 39%, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் 38%, கனடா பிரதமர் ஜஸ்டின், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் 37%, போலந்து பிரதமர் மேத்யூஸ் 32%, சுவீடன் பிரதமர் உஃல்ப் கிறிஸ்டர்சன் 32%, நார்வே பிரதமர் ஜோனாஸ் 27%, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 27%, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகமர் 27%, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் 25%, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ 25%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 24% வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு முதல் உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து புதிய சாதனை படைத்திருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்