அனந்தநாக் என்கவுன்ட்டர்: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

அனந்தநாக்: ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் என்கவுன்ட்டரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை தொடங்கிய என்கவுன்ட்டர் தற்போதும் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக கடந்த புதன்கிழமையன்று அனந்தநாகின் கோகேர்னாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கே பாதுகாப்புப் படையினர் குவிந்தனர். இதனையடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த என்கவுன்ட்டரில் இதுவரை ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப் பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்ப்ரீத் சிங், படை கமாண்டர் மேஜர் ஆஷிஷ், காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4வதாக காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கர்னல் மன்ப்ரீத் சிங், மேஜர் அஷிஷ் டோன்சக் ஆகியோரின் உடல்கள் பானிப்பட்டுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. டிஎஸ்பி ஹுமாயுன் பட் உடல் நேற்று (வியாழக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மூவரின் சடலங்களும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூட்டின்போது கர்னல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு அதிகாரிகளும் மருத்துவமனையில் இறந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE