பிஹாரில் மதிய உணவு சாப்பிட்ட 50 பள்ளிக் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி 

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் மதிய உணவு சாப்பிட்ட 50 பள்ளிக்குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர்கள் மருவத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டம் தும்ரா பிளாக்கில் உள்ளதொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 பள்ளி மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் சுதா ஜா அளித்த பேட்டியில்," உணவில் பச்சோந்தி இருந்ததாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், எந்த வித பாதிப்பும் இல்லாமலும் இருக்கின்றனர். இருப்பினும், நாங்கள் தொடர்ந்து குழந்தைகளைக் கண்காணித்து வருகிறோம். அவர்களின் பொற்றோர்களும் அவர்களுடன் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்

இது ஒருபுறம் இருக்க ச்சம்பவம் குறித்த பள்ளிக்கு மதிய உணவு வழங்கியவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறையினர் அந்த இடத்துக்குச் சென்று மீதமுள்ள உணவு மற்றும் ஜூஸை கைப்பற்றினர்.

முன்னதாக, கடந்த மாதம் மேற்கு டெல்லியின் தப்ரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 70 குழந்தைகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்