டெல்லியில் அமெரிக்க அதிபரின் பீஸ்ட் கார் - சிறப்பம்சங்கள்

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் அனைவரும் பிரபலமாக அறிந்த பெயர் ‘பீஸ்ட்’. ‘ஸ்டேஜ் கோச்’ என்ற குறியீட்டு பெயரும் இதற்கு உள்ளது.

அமெரிக்க அதிபர் உலகில்எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவென் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அதேபோல் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பீஸ்ட் காரில் பயணம் செய்கிறார். டெல்லி சாலைகளில் வலம் வரும் இந்த பீஸ்ட்கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த காரின் சிறப்பம்சங்கள்:

> சமீபத்திய மாடல் ‘பீஸ்ட் காரை’ ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

> இதன் எடை 6,800 கிலோ முதல் 9,100 கிலோ எடை வரை இருக்கும். இதில் 7 பேர் பயணம் செய்யலாம். இதன் நீளம் 18 அடி.

> அதிபரை பாதுகாக்க, பீஸ்ட் காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவசர காலத்தில் பயன்படுத்த அதிபரின் குரூப் ரத்தம் இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

> ரசாயன தாக்குதல் நடத்தினா லும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு பாதிப்பு ஏற்பாது. டயர் பஞ்சர் ஆனாலும் கார்ஓடும். இருள் சூழ்ந்த பகுதியை பார்க்கும் கருவிகள், தாக்குதலில் இருந்து தப்பிக்க புகை மண்டலத்தை ஏற்படுத்தும் சாதனம், எதிரிகளின் வாகனம் பின்தொடர்வதை தடுக்க எண்ணெய் பீய்ச்சி அடிக்கும் சாதனம் ஆகியவை இதில் உள்ளன.

> அலுமினியம், செராமிக் மற்றும் எஃகு பயன்படுத்தி கவச வாகனம் போல் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

> காரின் வெளிப்புற தகடுகள் 8 இன்ச் தடிமன் கொண்டவை. கார் கண்ணாடிகள் 130 மி.மீ தடிமனில் பல அடுக்குகளாக இருக்கும். காரின் ஒவ்வொரு கதவும் போயிங் 757 விமான கதவின் எடை அளவுக்கு இருக்கும். எதிரிகள் யாரும் கார் கதவை திறப்பதை தடுக்கும் வகையில் அதன் கைப்பிடியில் 120 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுக்கும் வசதிகளும் இதில் உள்ளன.

> துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை ஏவும் வசதிகளும் இதில் உள்ளன.

> அதிபரின் கார் அணிவகுப்பில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் செல்லும்.

> இதன் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.12 கோடியே 45 லட்சம்). ஆனால், இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 15 மில்லியன் டாலரை (ரூ.124 கோடி) ஜிஎம் நிறுவனம் செலவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்