பிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலை ரூ.50,000 கோடியில் விரிவாக்கம்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர்மாவட்டத்தில் ரூ.50,000 கோடியில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள பிபிசிஎல் சுத்திகரிப்பு ஆலை திட்டத்துக்கு வருகிற 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இதுகுறித்து சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யா கூறியதாவது: பிபிசிஎல்-க்கு சொந்தமான பைனா ரீபைனரி ஆலைவிரிவாக்க திட்டம் ரூ.50,000 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார். ஆண்டுக்கு 7.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் இந்த ஆலையின் சுத்திகரிப்பு திறன் 11 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

அதேபோன்று மாவட்ட தலைநகரத்திலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள ஹட்கல் கிராமத்திலும் புதிய ஆலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு தீபக் ஆர்யா கூறினார். பிபிசிஎல்-ன் பைனா ரீபைனரி ஆலை கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடக்கி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE