ஆந்திராவில் குக்கிராமங்களில் வசிக்கும் சாமானிய குடிமக்களுக்காக பைபர் க்ரிட் திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்படி, மாதம் ரூ.149-க்கு தொலைபேசி இணைப்பு, இணையதள சேவை, 250-க்கும் மேற்பட்ட டிவி சேனல் இணைப்பு வழங்கப் படும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இருந்தபோதே தமது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ‘ஹை-டெக்’ முதல்வர் என பெயரெடுத்தவர். அவரது முயற்சியின் பலனாக ஹைதராபாத் நகரம் தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்ற நகரமாக உருவெடுத்தது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டதால், ஆந்திராவின் வளர்ச்சி கேள்விக்குறியானது. ஆனால், சற்றும் மனம் தளர்வடையாமல் ஆந்திராவில் அமரவாதி என்ற பெயரில் ரூ.59,000 கோடி மதிப்பில் 33,000 ஏக்கர் பரப்பில் புதிய தலைநகரத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்.
காகிதமில்லா நிர்வாகம்
மேலும், மின்னணு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) மூலம் காகிதம் இல்லாத நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இவர் மேற்கொள்ளும் அமைச்சரவை கூட்டங்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களில் காகிதங்களை உபயோகிக்காமல் அனைத்தும் கணினி மூலமாகவும், ஐ-பேட் மூலமாகவும் மட்டுமே புள்ளி விவரங்களை கொண்டு விவாதிக்கப்படுகிறது. கிருஷ்ணா- கோதாவரி நதிகள் இணைப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் சந்திரபாபு நாயுடு பிற மாநில மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், மாநில அரசு அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு நடத்தும் ஆய்வுக்கூட்டம் தொடர்பான புகைப்படம் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. அதில் அதிகாரிகள் அனைவரும் கணினியில் தகவல்களை பார்க்கின்றனர். சந்திரபாபு நாயுடுவும் கணினி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். இந்த புகைப்படம், அவரை ‘ஹை-டெக்’ முதல்வர் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
இதுபோல, சாமானிய குடிமகனின் வீட்டுக்கும் இணையதள சேவையை வழங்க வேண்டுமென்பது நாயுடுவின் நீண்ட நாள் கனவாகும். இந்தக் கனவு இப்போது நிறைவேற உள்ளது. அதாவது பைபர் கிரிட் சேவை திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விஜயவாடாவில் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்படி குக்கிராமங்களுக்கு ரூ.149-க்கு இணைய தள இணைப்பு மட்டுமின்றி, தொலை பேசி இணைப்பு, 250-க் கும் மேற்பட்ட சேனல்கள் கொண்ட தொலைக்காட்சி இணைப்பு ஆகியவை வழங்கப்படும். இணையதள இணைப்பு 15 எம்பிபிஎஸ் முதல் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மோரி கிராமத்தில் இன்று அமல்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக 55 கிராமங்களில் விரிவுபடுத்தப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago