பிரதமர் நரேந்திர மோடி - என்விடியா சிஇஓ சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ்
வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.

‘‘என்விடியா தலைமை அதிகாரியை சந்தித்துப் பேசுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் வாய்த்தது. ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு இருக்கும் வளமான வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக பேசினோம். ஏஐ துறையில் இந்திய செய்துள்ள சாதனைகளை ஜென்சன் ஹுவாங் வெகுவாகப் பாராட்டினார். மேலும், இந்தியாவில் திறமை வாய்ந்த இளைஞர்கள் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்ததாக’’ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE