‘இண்டியா’ அபாயகரமான வார்த்தை: அமைச்சர் ராஜ்நாத் சிங்

By செய்திப்பிரிவு

ஜெய்சால்மர்: பாஜகவின் மூன்றாவது பரிவர்தன் சங்கல்ப் யாத்திரை நிகழ்ச்சி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டில் உள்ள 28 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் நிலை என்ன? இவர்கள் தங்கள் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்த வார்த்தை மிக அபாயகரமானது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின் போது, ‘இந்தியா ஒளிர்கிறது’ என நாம் கோஷமிட்டு தோல்வியடைந்தோம். ஆனால், தற்போது, உங்கள் கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயர் வைத்துள்ளீர்கள். உங்கள் தோல்வி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பிரதேசம் நீமுச் நகரில் நடந்த மக்கள் ஆசிர்வாத யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது, அதை ஒழிக்க வேண்டும் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மக்கள் உணர்வை புண்படுத்தியுள்ளது. இதனால் திமுக உறவை காங்கிரஸ் துண்டிக்க வேண்டும் அல்லது அவரது கருத்துக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்