புதுடெல்லி: எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு மாதத்தில் அதிக பின்தொடர்வோரை (பாலோயர்கள்) பெற்ற இந்திய அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-வது இடத்தில் உள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.
இதன்படி இந்திய அரசியல் தலைவர்களில் அதிக பின்தொடர்வோரை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் புதிதாக 6,32,444 பேர், எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பின்தொடர தொடங்கி உள்ளனர்.
அவருக்கு அடுத்து 2-வது இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அவரை புதிதாக 2,67,419 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3-வது இடத்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அவரை புதிதாக 1,82,840 பேர் பின்தொடருகின்றனர்.
எக்ஸ் சமூக வலைதளம் வெளியிட்ட பட்டியலில், அந்த வலைதளத்தின் உரிமையாளரும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபருமான எலன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஒரு மாதத்தில் புதிதாக 37,39,109 பேர் அவரை பின்தொடர்கின்றனர். அவருக்கு எடுத்து டோக்கியோ மெட்ரோ இன்போ நிறுவன கணக்கை ஒரு மாதத்தில் புதிதாக 15,39,404 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர்.
3-வது இடத்தில் இஸ்ரோ: இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் இஸ்ரோவை புதிதாக 11,66,140 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர். சந்திரயான் 3 திட்டம், ஆதித்யா எல்1 திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சர்வதேச அரங்கில் இஸ்ரோவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
எக்ஸ் சமூகவலைதளத்தின் புள்ளிவிவர பட்டியலில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 8-வது இடத்திலும், தொழிலதிபர் எலன் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் 14-வது இடத்திலும் உள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago