குஜராத் முதல்வராக விஜய் ரூபானி, துணை முதல்வராக நிதின் படேல் மீண்டும் தேர்வு

By செய்திப்பிரிவு

குஜராத் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியாகின. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதை தொடர்ந்து குஜராத் மாநில புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காந்திநகரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனை, நிதியமைச்சரும், பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அருண் ஜேட்லி அறிவித்தார்.

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், அங்கு கடும் சவாலை சந்தித்தது. முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும் காரணமாக கூறப்பட்டது. இதனால் முதல்வர் விஜய் ரூபானி மாற்றப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE