செல்லாத திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குழந்தைத் திருமணம், சட்டப்பூர்வமான துணை உயிருடன் இருக்கையில் மற்றொருவரை திருமணம் செய்தல் உள்ளிட்டவை சட்டரீதியாக செல்லாத திருமணங்கள் ஆகும்.

2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு, சட்ட ரீதியாக செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைகள் பெற்றோரின் சொத்தில் மட்டும் உரிமை கோர முடியும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கான சொத்துரிமை குறித்த மனுவை விசாரித்தது.

இது தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் சுயமாக உருவாக்கிய சொத்துகள் மீது மட்டுமல்ல, பெற்றோருக்குக் கிடைத்த பரம்பரை சொத்திலும் உரிமை உண்டு என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE