‘என் ரசீது என் உரிமை’ - ஜிஎஸ்டி பரிசு திட்டம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் இருந்து, ஜிஎஸ்டி இன்வாய்ஸ் கொண்டிருக்கும் 810 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களில் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் மீதுமுள்ள 800 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டம் முதற்கட்டமாக அசாம், குஜராத், ஹரியாணா, புதுச்சேரி, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு “என் ரசீது என் உரிமை’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிதி பங்களிப்பு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பரிசுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE