சிறார் வயது வரம்பில் மாற்றம்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

By எம்.சண்முகம்

சிறார் வயது வரம்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

சிறார் குற்றங்கள் தொடர் பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால் கவுடா ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்த கருத்து வருமாறு:

அரசு வேலைக்கு நிர்ணயிப்பதைப் போல் குற்றம் புரிவதற்கு ‘கட்-ஆஃப்’ தேதி நிர்ணயிக்க முடியாது. பாலியல் பலாத்காரம், கொலை, போதை மருந்து போன்ற கடும் குற்றம் புரிபவர்களை வயதைக் காரணம் காட்டி எப்படி விடுவிக்க முடியும்?

சிறார் என்பவர் ஒரே நாளில் முதிர்ச்சி அடைவதில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப, ‘சிறார் நீதிச் சட்டம் - 2000’ல் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

முன்னதாக மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிட்டபோது, “சிறார் வயது வரம்பை பொறுத்தவரை, ஐ.நா. குழந்தை கள் உரிமைகளுக்கான மாநாட்டின் விதிமுறைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. அதன்படி 18 வயதுவரை குழந்தைகள் என்று கருதப்படுகின்றனர்” என்றார்.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து சிறார் வயது வரம்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நீதிமன்றங்கள் பின்பற்றுவதாக அப்போது கூறப்பட்டது.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, “கடும் குற்றங்கள் புரிபவர்கள் 16 வயதுக்கு மேல் இருந்தால், அவர்களை பெரியவர்களாக கருதி தண்டிக்க வேண்டும்” என்று அண்மையில் கூறினார். இக்கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய கருத்து அவரது பிரச்சாரத்துக்கு வலு சேர்த்துள்ளது.

குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, சிறார் குற்றங்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 65 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2003-ல் 17,819 ஆக இருந்த குற்றங்கள், 2013-ல் 31,725 ஆக உயர்ந்துள்ளது. சிறார் தொடர்புடைய பாலியல் பலாத்காரம் 466-ல் இருந்து 1,175 ஆகவும், கொலை 465-ல் இருந்து, 990 ஆகவும் உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்